
posted 10th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ் சிறையினுள் சித்திரவதை - உயிர்பயத்தில் பெண் கைதிகள்
யாழ். சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் சிறைக்காவலர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதஉரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த முறைப்பாட்டில், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த பெண் கைதியை நேற்று முன்தினம் பார்வையிடச் சென்றபோது, அவர் ”தன்னைச் சிறைக்காவலர்கள் துன்புறுத்துவதாகக் கூறி அழுதார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
அண்மையில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)