முன்னாள் பிரதிமுதல்வர் வாழ்த்துச் செய்தி

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

முன்னாள் பிரதிமுதல்வர் வாழ்த்துச் செய்தி

“இம்முறை வெளியான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்” என கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது வாழ்த்து செய்தியில்,

பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரத்தில் கல்விகற்பதற்கு தெரிவான மாணவர்கள் தமது பிரிவுகளில் சிறந்த முறையில் படிப்பினை மேற்கொண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி பிரதேசத்திற்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் சிறந்த சேவைகளை வழங்கவேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.

எமது பிராந்தியத்திலுள்ள அநேகமான பாடசாலைகளில் இம்முறை சிறந்த சித்தியுடன் பல மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு தெரிவாகியுள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கின்றது. இவ்வாறு சித்தியடைந்து உயர் கற்கைநெறிகளுக்கு தெரிவாகிய அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், அதற்காக அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மனமகிழ்ச்சியடைகின்றேன்.

மேலும், சித்தியடையாத மாணவர்கள் இதனை எண்ணி கவலைகொள்ளாமல் மீண்டும் முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்து, தொழிநுட்பம் சார்ந்த ஏனைய துறைகளில் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் பிரதிமுதல்வர் வாழ்த்துச் செய்தி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)