
posted 31st December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
முன்னாள் பிரதிமுதல்வர் - பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சந்திப்பு
பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாறூக் புர்கி அவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்து பாகிஸ்தானுக்குச் செல்லவிருக்கும் நிலையில் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் நேரில் சென்று சந்தித்து தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
இச்சந்திப்பின்போது மேலும் பலவிடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன்; தமது பவுண்டேசனுக்கு உறுதுணையாக இருந்து பல விடயங்களில் ஒருங்கிணைப்புச் செய்த உயர்ஸ்தானிகருக்கு கல்முனை மக்கள் சார்பிலும், ரஹ்மத் பவுண்டேசன் சார்பிலும் நினைவுச் சின்னம் ஒன்றும் உயர்ஸ்தானிகருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)