மத்ரஸா மாணவன் உயிரிழப்பு மர்மமான கொலையா?

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மத்ரஸா மாணவன் உயிரிழப்பு மர்மமான கொலையா?

மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸாரின் நீண்ட சமர்ப்பணங்கள் உட்பட ஏனைய விடயங்களை ஆராய்ந்த நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலங்களை வழங்கிய மௌலவி இறுதியாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு உடற்பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேக நபராக மௌலவியின் சார்பாக எந்தவொரு சட்டத்தரணிகளும் முன்னிலையாகவில்லை. சந்தேக நபரான மௌவியின் வாக்குமூலங்களை பெற்ற பொலிஸார் சிசிரிவி கமெராக்களை பொருத்தியவர்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அட்டாளைச்சேனையில் மறைந்திருந்த சிசிரிவி கமெரா பொருத்திய நபர் மற்றும் அவரது உதவியாளர்கள் 3 பேரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது தனித்தனியாக அவர்கள் ஒவ்வொருவரிடமும் வாக்குமூலங்களை பெற்ற பொலிஸார் காணாமல்போன முக்கிய ஆதாரங்களை அழிக்கப்பட்ட நிலையில் வன்பொருள் சேமிப்பகத்தை கைப்பற்றி நீதிமன்ற சான்று பொருளாக மன்றில் ஒப்படைத்ததுடன் அரச பகுப்பாய்விற்காக அழிக்கப்பட்ட காணொளிகளை மீளவும் பெற்றுக்கொள்வதற்கு மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்ரஸா மாணவன் உயிரிழப்பு மர்மமான கொலையா?

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)