
posted 11th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பொன்னாலையில் போராட்டம்
அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர பிரதேசத்தையும் பொன்னாலை, துருத்திப்பிட்டி பகுதிகளையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிடுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பொன்னாலை சந்தியில் நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை காலை இந்த கவனவீர்ப்பு போராட்டதம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது;
> எமது கடல் எமக்கு வேண்டும்
- எமது நிலம் எமக்கு வேண்டும்
- கடலைச் சுவீகரித்து கடற்தொழிலாளர்களை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதே
- எமது கடலை சுவீகரிக்க எவருக்கும் அனுமதியில்லை
- ரணில் அரசே எமது கடலை சுவீகரித்து வரலாற்று தவறைச் செய்யாதே
- மேய்ச்சல் தரையையும், மயானங்களையும், மாட்டு வண்டி சவாரித் திடல்களையும் சுவீகரிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் பொன்னாலை தொடக்கம் அராலி வரையுள்ள கடற்றொழிலாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)