
posted 9th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பொத்துவில் மதுபானச்சாலைக்கு எதிராக குரல் எழுப்பினார் ரிஷாத்
“பொத்துவிலில் அமைக்கப்படவுள்ள மதுபானச்சாலைக்கு அனுமதி வழங்காமல் அரசு நிறுத்த வேண்டும்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரான ரிஷாத் பதியுதீனின் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
பொத்துவில் நகரில் மதுபான விற்பனை நிலையம் திறக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி அங்கிருக்கும் பொது அமைப்புக்கள் எங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள்.
அங்கு மதுபானசாலை அமைக்கப்படவுள்ளமையை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். குறித்த மதுபானசாலை அமையவுள்ள இடத்திலிருந்து 200 மீட்டருக்குட்பட்ட பிரதேசத்தில் பாடசாலைகள், பௌத்த விகாரை, கோயில், தேவாலயம், ஜும்மா பள்ளிவாசல், வைத்தியசாலை, நீதிமன்றம், பாலர் பாடசாலை என்பன அமைந்துள்ளன.
அங்கு மதுபானச்சாலை அமைந்தால் நாட்டின் இன்றைய பொருளாதார நிலையில் மக்கள் மதுபானத்திற்கும் நிறைய பணத்தை ஒதுக்கி சீரழிவார்கள் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)