
posted 31st December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
புதுக்குடியிருப்பில் கசிப்பு வேட்டை
புதுக்குடியிருப்பு - இடைக்கட்டு பகுதியில் இரண்டு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் 810 லீற்றர் கோடாவுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் (29) வெள்ளிஅதிகாலை 3 மணியளவில் இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையங்களும் முற்றுகையிடப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடைக்கட்டு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் செயற்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 14 பரல், 810 லீற்றர் கோடா, 60 லீற்றர் கசிப்பினையும் அப்பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)