பிணை வழங்க ஏற்பாடு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பிணை வழங்க ஏற்பாடு

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உயர்தர மாணவன் உட்பட 4 பேருக்கு பிணை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மாவீரர் தின நிகழ்வின்போது வவுனதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தரமாணவன் நியுட்டன் டனுசனுக்கு பிணை வழங்க கூடிய சாத்தியம் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த மாணவனை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று பிணை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு குறித்த மாணவனின் கோவைகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க குறித்த மாணவனின் கோவைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்து.

சாணக்கியன் அவர்களால் விசேட விதமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 4 பேருக்கு பிணை வழங்க நடவடிக்கை துரிதகதியில் இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிணை வழங்க ஏற்பாடு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)