
posted 5th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பதுமம் - 2023 நிகழ்வில் களைகட்டிய பாடல் இது
கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் இந்து மன்றம், தமிழ் இலக்கிய மன்றம்,நுண்கலை மன்றம் ஆகியன இணைந்து நடத்திய பதுமம் - 2023 என்ற நிகழ்ச்சி அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.
கொழும்பு நெலும் பொக்குண மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இங்கு சைவ மங்கையர் வித்தியாலய பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் மேடையை அலங்கரித்திருந்தது.
பதுமம் - 2023 ஆரம்ப நிகழ்வில் பொன்னியின் செல்வன் - 2 படத்தின் பாடலான ''வீரா ராஜா வீரா'' பாடலினை சைவ மங்கையர் வித்தியாலய மாணவிகள் வயலின், வீணை முதலான பாரம்பரிய இசை கருவிகள் சகிதம் பாடலினை பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தனர்.
குறித்த இன்னியம் இசை நிகழ்ச்சியை சைவ மங்கையர் வித்தியாலய ஆசிரியர் நிவாஸினி சக்திவேல் அவர்களின் நெறியாள்கையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)