
posted 12th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பணிப்பகிஷ்கரிப்பு
நாடளாவிய ரீதியில் தபால், தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள 48 மணி நேர பணி பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று 12.12.2023 இரண்டாவது நாளாகவும் முழு வெற்றிகரமாக இடம்பெற்றது.
இதனால் நாடளாவிய ரீதியில் தபால் சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன், நாட்டிலுள்ள பிரதம தபாலகங்கள், உப தபாலகங்கள் மூடப்பட்டு, தபாலகங்களின் சேவையை நாடிவந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் அவலமும் ஏற்பட்டது.
நுவரேலியாவிலும், கண்டியிலுமுள்ள 100 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த புராதன தபாலகங்கள் விற்பனை செய்வதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு கோரியும் மேற்படி பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை மாவட்டங்களிலும் மேற்படி பணிப்பகிஷ்கரிப்பு வெற்றிகரமாக இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அக்கரைப்பற்று தபால் அத்தியட்சகர் பிரிவிலுள்ள 13 பிரதான தபாலகங்களும், 53 உப தபாலகங்களும் இந்த 48 மணிநேர பணி பகிஷ்கரிப்புகாரணமாக மூடப்பட்டுள்ளன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)