
posted 16th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நிறுத்தப்பட்ட சுண்ணக்கல் அகழ்வு
சுண்ணக்கல் அகழ்வில் ஈடுபட்ட ரோக்கியோ நிறுவனத்திற்க்கு எதிராக அதனை நிறுத்தக் கோரி பூனகரி பிரதேசத்தின் வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் நேற்று (15) வெள்ளி ஈடுபட்டனர்.
குறித்த போராட்த்தின் மூலம் அங்கு சுண்ணக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ரோக்கியோ நிறுவனத்திற்குச் சொந்தமான மூன்று ICP வாகனங்கள் வெளியேற்றப்பட்டன.
குறித்த பிரதேசத்திற்க்கு வருகைதந்த கனியவளங்கள் மற்றும் புவி சரிதவியல் திணைக்கள் அதிகாரிகள், வனத்திணைக்களம், பூனகரி பிரதேச செயலகம், பூனகரி பிரதேச சபை அதிகாரிகள் குறித்த பகுதி ஆய்விற்கு உட்படுத்தவேண்டியுள்ளதால் குறித்த அகழ்வை உடனடியாக நிறுத்துமாறு பணிப்புரை விடுத்திருந்த நிலையில் அகழ்வு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிள்ளது.
எனினும் குறித்த சுண்ணக்கல் அகழ்வை நிறுத்தக் கோரி குறித்த பிரதேச மக்கள் பல நாள்களாக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)