தொடர் மழையால் அவதியுறும் சேந்தாங்குளம் கடற்றொழிலாளர்களுக்கு  அமைச்சர் டக்ளஸ் நிதியுதவி

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தொடர் மழையால் அவதியுறும் சேந்தாங்குளம் கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் நிதியுதவி

தற்போது பெய்துவரும் கன மழை காரணமாக பெரும் பாதிப்புகளுக்குள்ளான மாதகல் சேந்தாங்களம் பிரதேசத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதிப் பங்களிப்புடன் உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

குறித்த உலருணவுப் பொதிகள் பொதிகள் இன்றையதினம் சேந்தாங்களம் கடற்றொழிலாளர் கிராமிய அமைப்பினரால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன், கட்சியின் வலி வடக்கு பிரதேச நிர்வாக செயலாளர் ஜெயபாலசிங்கம் (அன்பு) மற்றும் கடற்றொழில் சம்மேளனங்களின் ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ரட்ணகுமார் (குமார்) ஆகியோரால் வழங்கிவைக்கப்பட்டது.

முன்பதாக தொடர் மழை காரணமாக மாதகல் சேந்தாங்களம் பிரதேச கரையோரப் பகுதி வாழ் கடற்றொழிலாளர்கள் பெரும் பாதிப்புகளுக்குள்ளான நிலையில் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு கடந்த 19 ஆம் திகதி விஜயம் செய்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் நிலைமைகளை நேரில் பார்வையிட்டிருந்ததுடன் பாதிப்புக்குள்ளான மக்களின் பிரச்சினைகளையும் தேவைப்பாடுகளையும் கேட்டறிந்துகொண்டார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உடனடி தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுமார் 5 இலட்சம் ரூபாவினை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சரின் நிதிப் பங்களிப்புடன் குறித்த பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 125 கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு அரிசி சீனி கோதுமை மா உ்ளளிட்ட உலருணவு பொதிகள் இன்றையதினம் சேந்தாங்களம் கடற்றொழிலாளர் கிராமிய அமைப்பினரின் ஒருங்கிணைப்பில் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர் மழையால் அவதியுறும் சேந்தாங்குளம் கடற்றொழிலாளர்களுக்கு  அமைச்சர் டக்ளஸ் நிதியுதவி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)