
posted 30th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தேசிய மட்ட பழுதூக்கல் போட்டியில் தெல்லிபழை மகாஜனா மாணவிகள் சாதனை
தேசிய மட்ட இளையோருக்கான பளுதூக்கல் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் இரு வீராங்கனைகள் வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளனர்.
பொலன்னறுவையில் நேற்று முன்தினம் (28) இடம்பெற்ற தேசிய ரீதியிலான போட்டியில் 87kg பிரிவில் ஜதுசா 103 kg எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளதுடன், 71kg பிரிவில் சிறீவித்தகி 88kg தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
இவ்வாறு வெற்றியீட்டி சாதனை படைத்த மாணவிகளுக்கு பலரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)