
posted 5th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தெல்லிப்பழை குருநாதசுவாமி கோயிலில் கந்தபுராண படன பூர்த்தி உற்சவம்
தெல்லிப்பழை குருநாதசுவாமி கோயிலில் கந்தபுராண படன பூர்த்தி உற்சவம் கடந்த சனிக்கிழமை (02) மாலை 6.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
கடந்த இரு மாத காலமாக கந்தபுராண படன படிப்பானது இடம்பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை நிறைவுற்றது.
முருகப்பெருமானுக்கு அபிஷேகம் , விசேட பூசைகளைத் தொடர்ந்து முருகப்பெருமான் இணை வள்ளி, தெய்வானையும் ; விநாயகப் பெருமானும் இணைந்து திருவீதி உலா வந்தனர்.
சம காலத்தில் கந்தபுராண படன படிப்பானது பல ஆலயங்களில் மருவி வரும் நிலையி்ல் ஆண்டு தோறும் இவ் ஆலயத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)