
posted 6th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தெல்லிப்பளையில் வன்முறையில் ஈடுபட்ட ஹைஏஸ் வாகனம் மீட்பு
தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பயணித்த வாகனம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பில் மறைந்திருந்த இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
இதில் வாள் வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வன்முறையில் ஈடுபட்ட கும்பலை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
அதேவேளை, குறித்த வன்முறைச் சம்பவமானது, யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் இரு வன்முறை கும்பல்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் மோதல் சம்பவத்தின் தொடர்ச்சி எனக் கூறப்படுகின்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)