
posted 18th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கொழும்பில் 50 ஆளுமைகள் நூல் வெளியீடு
பாவேந்தல் பாலமுனை பாறூக் எழுதிய 50 எழுத்து ஆளுமைகள் நூல் அறிமுக விழா கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபத்தின் பேராசிரியர் செ. யோகராசா அரங்கில் பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையில் நடைபெற்றது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகர், புலவர் ஹாஸிம் உமர் முன்னிலை வகித்து நூல் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். வரவேற்புரையை நிகழ்ச்சித் தொகுப்பாளரும் தமிழ் முரசு ஆசிரியருமான ஜீவாசதாசிவம் நிகழ்தினார்.
நூல் நயவுரையை பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் நிகழ்த்தினார் கருத்துரைகளை ஞானம் ஆசிரியர் எழுத்தாளர் டாக்டர் தி. ஞானசேகரன், எழுத்தாளர் உடுவை எஸ். தில்லை நடராஜா, கவிஞர் வாசுகி பி. வாசு ஆகியோர் வழங்கினர். சந்தக் கவிமணி கிண்ணியா அமீர் அலி, கவிமணி நஜ்முல் ஹுசைன் ஆகியோர் கவி வாழ்த்துரைத்தனர். பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர், தமிழன் பிரதம ஆசிரியர் சிவா ராமசாமி, உதயம் பிரதம ஆசிரியர் என்.எம். அமீன், தமிழ் மணி மானா மக்கீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)