
posted 28th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கொட்டோடை பிள்ளையார் ஆலயத்தினரால் சாதனையாளர்கள் கௌரவிப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு. அம்பன் கொட்டோடை பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் நேற்று (27) புதன் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது..
ஆலய பரிபாலன சபை தலைவர் தங்கராசா பார்த்தீபன் தலமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கொட்டோடை பிள்ளையார் ஆலய பிரதம குரு செந்தூர குருக்கள் பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவாகிய சந்திரகுமார் லக்சனா, சிறீதரன் தனுசியா, அழகராசா கபிலன் ஆகியோருக்கும், தரம் ஐநது புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்த யா. அம்பன் அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் சாந்தரூபன் சாருஜன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த சாதனையாளர்கள் கௌரவிப்பில் ஆலய பிரதம குரு சரந்தூரக்குருக்கள் அவர்களுடன் கிராமத்தின் மூத்த பிரஜைகளான க.தில்லையம்பலம், செ. நவரத்தினம், வி.அருந்தவராசா, கா. சுரேந்திரராசா மற்றும் கொட்டோடை அண்ணாமார் ஆலய அர்ச்சகர் க.பத்தமநாதன் ஆகியோரும் இணைந்திருந்தனர்.
இந்நிகழ்வுகளில் கொட்டோடை பிள்ளையார் ஆலய பக்த அடியார்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)