
posted 18th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் நிர்கதியான மக்கள்
தொடர்ச்சியான மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிளிநொச்சி மாவட்டத்தில் 6,364 குடும்பங்களைச் சேர்ந்த 4,305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரணைமடு குளத்தின் தாழ்வு நிலப்பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களான கண்டாவளை, தர்மபுரம், பிரமந்தனாறு, முரசுமோட்டை, புன்னைநீராவி, பெரியகுளம், குமரபுரம், ஊரியான், உமையள்புரம், பரந்தன், புளியம்பொக்கணை பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நான்கு நலன்புரி நிலையங்களில் நாகேந்திரபுரம் மகாவித்தியாலயம், முரசுமோட்டை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை, கண்டாவளை மகாவித்தியாலயம் ஆகிய இடங்களை நேற்று (17) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டார். அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிலையில், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இடங்களில் ஆயிரத்து 364 குடும்பங்களைச் சேர்ந்த 4,305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)