
posted 12th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் 2485 நாட்களாகத் தொடரும் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஞாமிற்றுக்கிழமை (10) கிளிநொச்சியிலும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் விசாரணைகளுக்காக ஒப்படைத்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்களுக்கு நீதிகோரி, கடந்த 2485 நாட்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், சர்வதேச மனித உரிமைகள் தினமாக அன்றைய தினம், முற்பகல் கிளிநொச்சி ஏ- 9 வீதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் கவனவீர்ப்பு அர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்ததனர்.
இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட சில பகுதிகளிலும் நேற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)