
posted 23rd December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கப்பல் மாதா உதவும் கரங்கள் அமைப்பினரால் மாணவர்கள், ஆசிரியர்கள் கெளரவிக்கும் நிகழ்வு
கப்பல் மாதா உதவும் கரங்கள் அமைப்பினரால் மாணவர்கள், ஆசிரியர்கள் கெளரவிக்கும் நிகழ்வு இன்று (23) சனிக்கிழமை
மாலை 3.00 மணியளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மரியாள் மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்விற்கு கெளரவ விருந்தினராக யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்டணம் அடிகளார் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக கட்டைக்காடு பங்குத்தந்தை A.அமல்ராஜ்,கட்டைக்காடு றோ,க,த,க பாடசாலை அதிபர் T.யோகலிங்கம் மற்றும் முள்ளியான் கிராம சேவகர் K.சுபகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உயர்தர மாணவர்கள் மற்றும் சித்தியடைந்த ஏனைய மாணவர்கள் கெளரவிக்கப்பட்டதோடு, ஆசிரியர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
கட்டைக்காடு கப்பல் மாதா உதவும் கரங்கள் அமைப்பு வடமராட்சி கிழக்கில் மட்டுமல்ல யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்டங்களிலும் அதிகளவான சமூக சேவைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)