
posted 9th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஏறாவூர் நகர சபைக்கு கணக்கீட்டு முகாமைத்துவத்திற்கு சிறப்பு விருது
இலங்கை பொதுநிதி கணக்காளர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நாட்டிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கணக்கீட்டு முகாமைத்துவத்தை சிறப்பாக அறிக்கையிடுதல் சம்பந்தமான போட்டியில் ஏறாவூர் நகரசபைக்கு சிறப்பு விருது கிடைத்துள்ளது.
கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் நீல் அசோக்க ரஞ்சித் அவர்களிடமிருந்து ஏறாவூர் நகரசபையின் சார்பாக சிறப்பு விருதினை அதன் செயலாளரும் விஷேட ஆணையாளருமான எம்.எச்.எம். ஹமீம், கணக்காளர் புஸ்ரா நுஸைர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)