
posted 26th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
உடுத்துறை சுனாமி நினைவேந்தல்
யாழ் மாவட்டத்தில் சுனாமிப்பேரலை அனர்த்தத்தில 900 பேருக்கும் காவு கொள்ளப்பட்ட வடமராட்சிகிழக்குப் பிரதேசத்தில்உள்ள உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் காவு கொள்ளப்பட்டோர்களின் உறவுகளின் பலத்தஅழுகை ஓலத்தின் மத்தியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
நேற்று (25) திங்கள் வடமராட்சிக் கிழக்கு பிரதேசசெயலாளர் கு. பிரபாகரமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தேசிய கொடியை மருதங்கேணி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏற்றி வைத்ததை தொடர்ந்து பொது நினைவிடத்திற்கு மலர் மாலை, அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலிகளும் இடம்பெற்றன.
பொது ஈகைச் சுடரினை பிரதேச செயலாளர் கு. பிரபாகரமூர்த்தி ஏற்றிவைக்க சம நேரத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு அவர்களது உறவுகளால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்பு பிரதிநிதிகள், சுனாமியில் உயிர் நீத்தவர்களது உறவுகள் நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)