
posted 15th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இலங்கை வருகை தரும் பிரிட்டன் இளவரசி ஆன்
பிரிட்டனின் இளவரசி ஆன் எலிசபெத் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இளவரசி ஆன் எலிசபெத் இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
அவருடன் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் டிம் லாரன்ஸும் இலங்கை வரவுள்ளார்.
இலங்கை - இங்கிலாந்து இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் பங்கேற்குமாறு அரசாங்கம் விடுத்த அழைப்பின் பேரிலேயே இளவரசி ஆன் இலங்கை வரவுள்ளார்.
இளவரசி ஆன் எலிசபெத், இரண்டாம் எலிசபெத் இளவரசி மற்றும் எடின்பேர்க் இளவரசர் பிலிப் ஆகியோருக்கு பிறந்த ஒரே மகளும், இரண்டாவது பிள்ளையும் மற்றும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் சகோதரியும் ஆவார்.
இளவரசி ஆன் எலிசபெத் தனது இலங்கை பயணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)