இலங்கை - மாலைதீவு பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக முஷாரப் எம்.பி தெரிவு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இலங்கை - மாலைதீவு பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக முஷாரப் எம்.பி தெரிவு

பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் இலங்கை - மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டதுடன், சங்கத்தின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்தத் தெரிவு, முஷாரப் எம்.பியின் திறமையான தலைமையின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான இராஜதந்திர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான ஏதுக்களை உருவாக்கியிருக்கிறது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான மாலைதீவின் பிரதி உயர்ஸ்தானிகர் அதிமேதகு. திருமதி பாத்திமா கினா, இலங்கைளின் பாராளுமன்ற கௌரவ சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் மற்றும் அர்ப்பணிப்புள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நட்புறவுச் சங்கத்தின் பணியாற்றலை வெகுவாக கட்டமைக்க, தலைவர் பாராளுமன்ற உறுப்பினர், SMM முஷாரப் அவர்களோடு பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

துணைத் தலைவர்கள்:

  • கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன்
  • கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம்
  • கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க

செயலாளர்:

  • கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் டெனிபிட்டிய

துணை செயலாளர்:

  • கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வன் அடைக்கலநாதன்

பொருளாளர்:

  • கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்

இந்த நிகழ்வின் போது இலங்கை - மாலைதீவு உறவுகள் குறித்து சாதகமான கருத்துக்கள் பகிரப்பட்டன.

தன்னை சங்கத்தின் தலைவராக தெரிவு செய்தமைக்காக நன்றியைத் தெரிவித்த முஷாரப் எம்.பி, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் கலாசார பரிமாற்றம் ஆகியவற்றின் நீண்டகால வரலாறு பற்றி சிலாகித்துப் பேசினார்.

மேலும் முஷாரப் எம்.பி. உரையாற்றுகையில், இலங்கை - மாலைதீவு உறவுகளின் எதிர்காலத்திற்கான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்,

"இரு நாடுகளும் ஒரு வளமான வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன. மேலும் இந்த சங்கம் போன்ற முன்முயற்சிகள் மூலம், பலப்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் புரிதலின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நாங்கள் கட்டமைக்க முடியும். ஒன்றாக இணைந்து செயற்படுவதன் மூலம், பெரிய விடயங்களைச் சாதிக்க முடியும்" எனவும் தெரிவித்தார்.

இலங்கை - மாலைதீவு பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக முஷாரப் எம்.பி தெரிவு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)