
posted 21st December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இரணைமடு குளத்தை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்
கிளிநொச்சிப் பகுதிக்கு நேற்று (20) புதன்கிழமை விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரணைமடுக் குளத்துக்கும் விஜயம் செய்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது பெய்துவரும் தொடர் மழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில் தொடர்ந்தும் நீரினை வெளியேற்றும் வகையில் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
அனர்த்த நிலைமைகளை தடுக்கும் வகையில் ஏதுவான நிலையினை ஆராயும் நோக்கோடு இரணைமடுவுக்கு களவிஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டதோடு நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளோடு கலந்துரையாடலையும் நடத்தினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)