இணைக்கப்பட வேண்டிய சேவைகள்  - சாணக்கியன்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இணைக்கப்பட வேண்டிய சேவைகள் - சாணக்கியன்

தேசிய ரீதியில் புகையிரத, அரச மற்றும் தனியார் பேரூந்து என ஒருங்கிணைந்த சேவையாக போக்குவரத்து சேவை திட்டமிடல் அமைய வேண்டும். இவ்வாறு பாராளுமன்றத்தில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சிக் காலத்தில் தேசிய கொள்கை இல்லாமையின் காரணமாக அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலை, அதிவேக புகையிரத போக்குவரத்து என்பன அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டமையினால் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு முறையான போக்குவரத்து வசதிகள் அமைக்கப்படவில்லை. குருணாகல் மாவட்டத்தில் நாமல் ராஜபக்க்ஷ தேர்தலில் போட்டியிட்ட போதும் குருணாகல் மாவட்டத்தில் ஒரு அதிவேக நெடுஞ்சாலையினைக் கூட அமைக்கவில்லை. மகிந்த ராஜபக்ஷவினர் எப்போதும் தமது மாவட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக 22 மில்லியன் மக்களின் வரிப்பணத்தினையும் வீணடித்து பல்வேறு அபிவிருத்திகளை அம்பாந்தோட்டையில் செய்துள்ளனர்.

தற்போது புகையிரத சேவைகளுக்கு மாத்திரமே பயண உத்தரவுச் சீட்டு (Warrant) வழங்கப்படுகின்றது. அதனை பேரூந்து சேவைகளுக்கும் மிக விரைவில் ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் பாதுகாப்பற்ற புகையிரத கடவைககள் புணரமைக்கப்பட்டு அதில் பணி புரியும் ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாகப்பட வேண்டும். அத்துடன் இங்கு பணிபுரிந்து ஓய்வடைந்தவர்களுக்கும் உரிய நேரத்தில் ஓய்வூதியம் வழங்கப்படல் வேண்டும்.

நல்லாட்சி காலத்தில் ADB வங்கி, உலக வங்கி போன்றவற்றினூடாக சிபார்சு செய்யப்பட்ட iProjectறிற்கான வெளிநாட்டு நிதியானது கோட்டாபயவின் முறையற்ற பொருளாதாரக் கொள்கையினால் தடை செய்யப்பட்டது. இதற்கு காரணம் கோட்டாபய மாத்திரம் அல்ல கோட்டாபயவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்திற்கு வாக்களித்த அனைவரும் காரணம் என மகிந்த ராஜபக்ஷ தனது உரையில் கூறினார். ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டமைக்குக் காரணம் இந்த iProject செயற்படுத்தப்படாமையேயாகும். எனவே, அரசாங்கத்துடன் இணைந்து வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்த எமது மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

இணைக்கப்பட வேண்டிய சேவைகள்  - சாணக்கியன்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)