
posted 27th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
45 கைதிகள் விடுதலை
நத்தார் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 2 பெண் கைதிகள் உட்பட 45 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் என். பிரபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என். பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே விடுதலை செய்யப்பட்ட கைதிகளாவர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)