
posted 7th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆலோசனை பெறல்
சம்மாந்துறை பிரதேச சபையின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை தயாரிப்பதற்கான மகளிர் அமைப்புக்கள், பெண் தலைமை தாங்கும் குடும்ப தலைவிகளின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் பெறும் கலந்துரையாடல் அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துக்களும் ஆலோசனைகளும் பெறப்பட்டது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.ஏ. அப்துல் மஜீட், நிதி உதவியாளர் ஐ.கே. சித்தி நஜீமா, உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)