
posted 18th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஸரிகமப இசை போட்டி நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரான கில்மிஷா பட்டத்தை வென்றார்
இந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான ஷீ தமிழ் நடத்திய ஸரிகமப இசை போட்டி நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரான கில்மிஷா பட்டத்தை வென்றார். அவருக்கு 10 இலட்சம் (இந்திய) ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது.
இந்தியாவின் மிகப்பெரும் ஊடக நிறுவனமான ஷீ குழுமத்தின் தமிழ் ஒளிபரப்பான ஷீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் ஸரிகமப என்ற போட்டியை நடத்துகிறது. இதில் சிறுவர்களுக்கான போட்டியின் மூன்றாவது பருவத்தில் 28 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த உதயசீலன் கில்மிஷா, மலையகத்தை சேர்ந்த கனகராஜ் அசானி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த இசை போட்டி நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடந்தது. இதில், கில்மிஷா உட்பட ஆறு பேர் பங்கேற்றனர். இதேநேரம், இந்தப் பட்டியலில் மலையகத்தை சேர்ந்தவரான அசானியின் பெயர் இடம்பெறவில்லை.
நேற்று (17) நடந்த இறுதிப் போட்டியில் உதயசீலன் கில்மிஷா வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கான விருதை பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான யுவன்சங்கர் ராஜா வழங்கினார். அவருக்கு, 10 இலட்சம் இந்திய ரூபாய் பரிசாக அளிக்கப்பட்டது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)