
posted 30th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வாகன விபத்தில் மாணவி படுகாயம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியினை கடக்க முற்பட்ட மாணவி மீது டிபெண்டர் வாகனம் மோதியதில் மாணவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம் (28) வியாழக்கிழமை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றது.
பரந்தன் வீதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்ற டிபெண்டர் வாகனம் வள்ளிபுனம் பகுதியில் சைக்கிளில் வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது மோதியதில் மாணவியொருவர் படுகாயமடைந்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த 16 வயதுடைய பாடசாலை மாணவி வள்ளிபுனம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
குறித்த விபத்தினை ஏற்படுத்திய களுத்துறையைச் சேர்ந்த 54 வயதுடைய வாகனத்தின் சாரதி புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)