
posted 4th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வட்டு. இளைஞன் உயிரிழப்பு; நாளை அடையாள அணிவகுப்பு
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் நாளை (05) செவ்வாய்க்கிழமை அடையாள அணிவகுப்புக்கு யாழ்ப்பாண நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்குள்ளாகி இளைஞர் உயிரிழந்தார் என்று கூறப்படும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைகள் நடைபெறுகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பில், கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மூன்று பொறுப்பதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என சட்டத்தரணிகள் அனுமதி கோரிய நிலையில் நீதிவான் அதற்கு அனுமதி வழங்கினார்.
இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணக்கு எடுக்கப்படவுள்ளது. இதன்போது சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன. இதையடுத்து, நாளை அடையாள அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
குற்றச் சம்பவம் ஒன்றில் சந்தேகநபராக வட்டுக்கோட்டை பொலிஸாரால் நாகராசா அலெக்ஸ் கைது செய்யப்பட்டார். தடுப்பில் சித்திரவதைகளுக்குள்ளான அவர் கடந்த நவம்பர் 19ஆம் திகதி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)