
posted 11th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வடக்கின் ரயில் சேவை 6 மாதங்கள் தடைப்படும்
மாஹோ சந்தி முதல் அநுராதபுரம் வரையான வடக்கு ரயில் பாதை திருத்த பணிகளுக்காக 6 மாதங்களுக்கு மூடப்படவுள்ளது என்று புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் எதிர்வரும் 6 மாதங்களுக்கு குறித்த தொடருந்து மார்க்கம் மூடப்படவுள்ளது.
இந்தக் காலப் பகுதியில் கொழும்பிலிருந்து மாஹோ சந்தி வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து அநுராதபுரம் வரையிலுமே ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)