
posted 13th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் மறியலில்
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் போதை மாத்திரை மற்றும் போதைப் பொருளுடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட பிரதேசத்தில் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் நடமாடுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில குறித்த மாணவன் கைது செய்யப்பட்டார்.
குறித்த மாணவன் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது நீதவான் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டார்.
குறித்த மாணவன் ஏற்கனவே திருநெல்வேலிப் பகுதியில் போதை தலைக்கேறி ரகளையில் ஈடுபட்ட நிலையில் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் யாவரும் அறிந்ததே.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)