
posted 18th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
முல்லையில் தொடரும் மழையின் அனர்த்தங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக 56 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த 976 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் சி. கோகுலராஜா தெரிவித்தார்.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து குளங்களும் நீர் நிரம்பி வழிகின்றன. முத்து ஐயன் கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.இந்த குளங்களின் கீழ் பகுதிகளில் இருக்கின்ற மக்கள் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
வெள்ள நீர் வழிந்து ஓட முடியாத நிலையில் பல்வேறுபட்ட குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் 68 குடும்பங்களை சேர்ந்த 222 அங்கத்தவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அதிகளவான வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் 15 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் குடியிருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)