மட்டக்களப்பில் மாவட்ட இலக்கிய விழா

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மட்டக்களப்பில் மாவட்ட இலக்கிய விழா

கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்தும் 2023ஆம் ஆண்டிற்கான மாவட்ட இலக்கியவிழா மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் கலந்துகொண்டார்.

நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவரும், மகரகம தேசிய கல்வி நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி முருகு தயாநிதி, கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எச்.எம். முசாமில் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மூவினங்களின் பாரம்பரியம், தொன்மை மற்றும் பல் மத கலாசார வெளிப்பாடுகள், விழுமியங்களை வெளிப்படுத்தும் பண்பாட்டு கலை கலாசார, இலக்கிய நிகழ்வுகள் இதன்போது அரங்கேற்றப்பட்டன.

இதன்போது இலக்கிய விழாவை முன்னிட்டு மாவட்ட ரீதியில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் இதன்போது அதிதிகளினால் பராட்டி நினைவுச்சின்னங்கள், பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பில் மாவட்ட இலக்கிய விழா

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)