போதைப்பொருள் பாவனையும் எய்ட்ஸ் பரவலும்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

போதைப்பொருள் பாவனையும் எய்ட்ஸ் பரவலும்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையால் எய்ட்ஸ் தொற்று நோய் பரவலும் அதிகரித்திருக்கலாம் என்று வட பிராந்திய பால்வினை நோய் தடுப்பு சிகிச்சை நிலைய மருத்துவர் ஏ. றொகான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச எய்ட்ஸ் தடுப்பு தினமான நேற்று முன்னையநாள் (30.11.2023) அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

யாழ்ப்பாணத்தில் தற்போது பெருமளவான போதைப்பொருள் பாவனையாளர்கள் இரத்த நாளங்களின் ஊடாக உடலில் போதைப்பொருளை ஏற்றிக்கொள்கின்றார்கள். இதனால் எய்ட்ஸ் போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது.

போதைப்பொருள் ஓர் ஊசியை பலர் பாவிப்பதனால் ஒருவருக்கு எய்ட்ஸ் தொற்று இருந்தால் அந்த ஊசியைப் பயன்படுத்தும் மற்றவரும் தொற்றுக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

நாட்டில் தற்போது 5 ஆயிரத்து 500 பேர் எய்ட்ஸ் நோயாளர்கள் உள்ளனர். இதில், வடக்கு மாகாணத்தில் 90 தொற்றாளர்கள் உள்ளனர். யாழ்ப்பாணத்தில் 65 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை சராசரியாகக் கூடுகின்றது. கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் 3 தொற்றாளர்களும் இந்த ஆண்டு 4 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டனர். இவர்களுக்கான சிகிச்சைகள் யாழ். போதனா மருத்துவமனையில் வழங்கப்படுகின்றது என்றார்.

போதைப்பொருள் பாவனையும் எய்ட்ஸ் பரவலும்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)