
posted 9th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
புதிய படைப்புக்கான ஆக்கத்திறன்
அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட ரோபோ தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலய மாணவி கிருபைராசா - ஆஸ்திகா மூன்றாம் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.
தேசிய மட்ட ரோபோ தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க போட்டிகள் கொழும்பு மகரஹம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் கடந்த 2023.12.05 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில் தரம் பத்தில் (10 ) இல் கல்வி பயிலும் கிருபைராசா ஆஸ்திகா ”புதிய படைப்புக்கான ஆக்கத்திறன்” பிரிவில் கல்வித்துறை சார்ந்து போட்டியிட்டு அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார். குறித்த மாணவி கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற போட்டில் தொடரிலும் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டார்.
குறித்த மாணவியையும் இம்மாணவிக்கான பயிற்சிகளை திறன்பட வழங்கி வெற்றிபெறுவதற்கு முன்னின்று உழைத்த ஆசிரியர் ம. அனுசாந்தனையும் பாடசாலை அதிபர் தி. ஈஸ்வரன் பாராட்டி கௌரவித்தார்
இம் மாணவி துறைநீலாவணை மெதடிஸ்த மிஸன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் சா. கிருபைராசா நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திலகராணி தம்பதியினரின் புதல்வியாவார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)