பலவகைச் செய்தித் துணுக்குகள்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00
பலவகைச் செய்தித் துணுக்குகள்

ஊசி மூலமான போதை பாவனை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு - அரச அதிபர்

(எஸ் தில்லைநாதன்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றும் போக்கு அதிகரித்துள்ளது என்று மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

சட்ட மருத்துவ அதிகாரிகளின் தகவல்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் பேசி நடவடிக்கைக்கு வலியுறுத்தியுள்ளேன். சில இடங்களை மையப்படுத்தி விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

யானைகளின் அட்டகாசத்தினால் பல இலட்சங்களை இழந்த விவசாயிகள்

(எஸ் தில்லைநாதன்)

முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார்கட்டு கமநல சேவை பிரிவிற்குட்பட்ட விசுவமடு தொட்டியடி மேற்கு பகுதியில் (13)வாழை தோட்டத்திற்குள் புகுந்த 04 யானைகளால் விலை மதிப்பான கப்பல் வாழை மரங்களை அழித்துள்ளது.

இரவு 07மணியளவில் தோட்த்துக்குள் புகுந்த 04 யானைகள் அதிகாலை 2.00மணி வரை வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. சுமார் அரை ஏக்கர் வாழை திட்டத்தின் அடிப்படையில் பெறுமதி மிக்க 480 வாழைகள் வழங்கப்பட்டன.

அதில் 225 வாழைகளை பயன் பெரும் நேரத்தில் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் 04 இலட்சம் ரூபாய் தமக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், போன வருடமும் இதே போன்ற அழிவை சந்தித்துள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள யானை வேலி ஒன்றை அமைத்து தருமாறும் கேட்டுள்ளனர்.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

ஆரம்பமாகவுள்ள கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி பகுப்பாய்வு நடவடிக்கை

(எஸ் தில்லைநாதன்)

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான பகுப்பாய்வு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது என்று சட்ட மருத்துவ அதிகாரி வாசுதேவ நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் வியாழனன்று (13) நடைபெற்றது.

இதுவரை நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது மீட்கப்பட்ட 40 மனித எச்சங்களின் வயது மற்றும் பாலினம் தொடர்பில் எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் பகுப்பாய்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேசமயம், திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி மீண்டும் புதைகுழியின் அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள வழக்கு விசாரணையின்போது அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)