பலவகைச் செய்தித் துணுக்குகள்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00
பலவகைச் செய்தித் துணுக்குகள்

மாதகலில் மிதிவெடி கண்டுபிடிப்பு

(எஸ் தில்லைநாதன்)

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாதகல் - உயரப்புலம் பகுதியில் உள்ள காணி ஒன்றில் மிதிவெடி நேற்றுவெள்ளி அவதானிக்கப்பட்டது.

குறித்த காணியின் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும்போது அந்த காணியில் வெடிகுண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நீதிமன்றத்தின் அனுமதியின் பின்னர் குறித்த வெடிபொருளை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



மன்னாரை சேர்ந்த மேலும் 7 பேர் தனுஷ்கோடிக்கு அகதியாக பயணம்

(எஸ் தில்லைநாதன்)

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி மன்னார் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் படகுமூலம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (01) இலங்கையில் இருந்து புறப்பட்டு தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்.

தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன் போலீசார் அவரை மீட்டு முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.

பொருளாதார நொருக்கடி காரணமாக இன்று வரை 295 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


செட்டிக்குளம் இரட்டை கொலை

(எஸ் தில்லைநாதன்)

வவுனியா - செட்டிக்குளம் இரட்டைக் கொலை தொடர்பில் 19 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி - பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 30ஆம் திகதி செட்டிக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையமொன்றில் கணவன், மனைவி இருவரும் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது 10,000 ரூபா பணமும், தங்க நகையும் கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, அவர் குற்றச்செயலின்போது அணிந்திருந்த ஆடைகளும் திருடப்பட்ட தங்க நகையும் பை ஒன்றில் மறைத்து வைத்து கிணற்றில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)