
posted 27th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பண்ணையாளரின் கொலையில் பராமரித்தவன் கைது
அம்பாறை - வாங்காமம் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாங்காமம் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் ஐவர் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இறக்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.
வாங்காமத்தை சேர்ந்த ஆட்டுப் பண்ணை ஒன்றின் உரிமையாளரே கடந்த வௌ்ளிக்கிழமை (22) கொலை செய்யப்பட்டிருந்தார்.
ஆட்டுப் பண்ணையை பராமரித்து வந்த அக்கரைப்பற்று காந்தி வீதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆட்டுப் பண்ணை உரிமையாளருடன் இடம்பெற்ற முரண்பாட்டை அடுத்து இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இறக்காமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)