
posted 1st December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நீரினால் ஆக்கிரமிக்கப்பட்ட கிளிநொச்சி தருமபுரம் பொதுச் சந்தை
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொதுச் சந்தை நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் தருமபுரம் பொதுச் சந்தையில் வெள்ளநீர் வடிந்தோட முடியாத நிலையில் தேங்கியுள்ளது.
சந்தையைச்சூழ்ந்து மழைநீர் தேங்கியுள்ளதினாலும், சேதமடைந்துள்ள கட்டிடத்தின் கூரையிலிருந்து மழைநீர் ஒழுக்கு ஏற்படுவனாலும் வியாபார நடவடிகையினை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளதென வியாபாரிகள் தமது கவலையினைத் தெரிவிக்கின்றனர். இதனால், சந்தைக்கு கொள்வனவு செய்ய வருவோரின் வரவு வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதனால் நாளாந்தம் வியாபாரத்தினால் ஈட்டும் வருமானமும் குறைவடைந்துள்ளதனால் வியாபாரிகளின் ஆதங்கம் அதிகரித்துள்ளதை சம்பந்தப்பட்ட அரசத் திணைக்களங்கள் கவனத்திற்கு எடுத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்துதரும்படி தெரிவிக்கின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)