
posted 25th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தேநீர் அருந்திய வங்கி ஊழியர் திடீரென விழுந்து உயிரிழப்பு
இலங்கை வங்கி உத்தியோகத்தர் ஒருவர் தேநீர் அருந்தியநிலையில், திடீரென உயிரிழந்த சம்பவம் வடமராட்சியில் நிகழ்ந்துள்ளது.
தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த 41 வயதுடைய வங்கி உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார்.
ஒட்டுசுட்டான் இலங்கை வங்கிக் கிளையில் நிறைவேற்று உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் அவர், கொடிகாமம் பகுதியில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு முச்சக்கரவண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இவரது மரணம் தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரியால் சனிக்கிழமை (23) மேற்கொள்ளப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)