தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் அற்றார் அழிபசி தீர்த்தல் என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

பகிர்ந்துண்டு வாழ்வோம் என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின்கீழ் சனிக்கிழமை (09.12.2023) கொட்டடி, இருபாலை ஆகிய பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 60 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலருணவுகள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்றது. இதற்கான நிதி அனுசரணையை அமரர் பொ.பரமேஸ்வரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் வழங்கியிருந்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் திருமதி பராசக்தி பரமேஸ்வரன் கலந்துகொண்டு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.

கொரோனாப் பேரிடர்க் காலத்தில் ஏற்பட்ட பொதுமுடக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சீர்குலைவு காரணமாக வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. இதனைக் கருத்திற்கொண்டே கொரோனாத் தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் இருந்து தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நன்கொடையாளர்களின் அனுசரணையோடு அற்றார் அழிபசி தீர்த்தல் என்ற உலருணவுப் பொதிகளை வழங்கும் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)