
posted 26th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
டெங்கு நோயினால் அடுத்தடுத்த மரணங்கள்
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கத்தால் 11 மாதமே ஆன ஆண் குழந்தை ஒன்று நேற்று (25) திங்கள்உயிரிழந்தது.
தாவடியை சேர்ந்த மதுரன் கிருத்திஸ் என்ற குழந்தையே டெங்கு நோயால் உயிரிழந்தது.
யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, யாழ். போதனா மருத்துவமனையில் 25 வயது இளைஞன் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேநேரம், யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருந்து ஒவ்வாமையால் நேற்று முன்தினம் ஞாயிறு (24) உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவல் அதிகமாக உள்ளது. எனவே பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)