
posted 25th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
டெங்கு நோயாளர்களுக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் 2 விடுதிகள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்குள்ளான 114 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் டெங்கு தொற்று நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது 114 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஏற்கனவே இருந்த விடுதிகளில் இடப்பற்றாக்குறை காணப்பட்டதன் காரணமாக மேலதிகமாக 2 காய்ச்சல் விடுதிகளை இந்த டெங்கு நோயாளர்களுக்கென புதிதாக ஆரம்பித்திருக்கின்றோம்.
டெங்குத் தொற்றுக்குள்ளாகி விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 114 பேரில் அரை வாசிக்கும் மேற்பட்டோர் சாதாரண காய்ச்சலுடன் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல அரைவாசிக்கும் மேற்பட்டோருக்கு தாதியரின் கண்காணிப்பில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
மேலும் சுகாதார அமைச்சினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுடெங்கு தொற்றுக்குள்ளானோக்குரிய மருந்து வகைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கப்படுகின்றது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)