ஜனாதிபதியுடனான முக்கிய சந்திப்பு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பலனில்லாத சந்திப்பு பலன்தரும் என்ற நம்பிக்கை

ஜனாதிபதியுடனான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என்பதால்; பண்ணையாளர்களின் 90ஆவது நாள் போராட்டத்தை முன்னிட்டு இன்றையதினம் தானும், கௌரவ பாராளமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களும் ஜனாதிபதியை சந்தித்து முக்கியமான இரு விடயங்களைப் பற்றி உரையாடியதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

அந்த வகையில் மயிலத்தமடு மாதவனை பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மாடுகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகைப்படங்களை சமர்ப்பித்ததோடு பொலிசாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாடுகளின் பிரதிகளையும் வழங்கினர்.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபடும் எமது மக்கள் 90 நாளாகவும் போராட்டத்தினை தொடர்கின்றனர் என்பதனைப் பற்றியும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். ஜனாதிபதி கூறிய எந்தவொரு விடயத்தினையும் இப் பிரச்சனைக்கான தீர்வாக நடைமுறைப்படுத்தவில்லை எனவும் தெளிவுபடுத்தினர்.

இரண்டாவதாக் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கான விசாரணைகள் இடம்பெறுவதோடு; பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை பயன்படுத்த மாட்டோம் எனக் கூறிக்கொண்டாலும் அச்சட்டத்தினை கடைப்பிடித்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நிகழ்வில் கலந்து கொண்டோரை இன்றுவரை இனங்கண்டு கைது செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதனையும் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறினர்.

அத்துடன் உடனடியாக இதனை முடிவிற்கு கொண்டுவர வேண்டுமெனவும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை ஜனாதிபதிக்கு வழங்கி இவர்கள் பி.ரி.ஏ பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் கோரிக்கையினை முன்வைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எதுவும் எட்டப்படாதவிடத்தும் எதற்காக ஜனாதிபதியினை சந்திக்கின்றீர்கள்? என மக்கள் கேள்விகள் எழுப்புகின்ற போது எமது விருப்பு வெறுப்புக்களை துறந்து ஜனாதிபதி, அமைச்சர்கள், ஆளுநர் ஆகியோரை சந்தித்தும், நீதிமன்றங்களை நாடியும் மக்களுக்கான தீர்வினை பெறுவதற்கான எமது அயராத முயற்சி என்றும் எமது மக்களுக்காக தொடர்ந்து கொண்டிருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான முக்கிய சந்திப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)