
posted 18th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
செவிப்புலனற்றோர் நிறுவனம் நடாத்திய வருடாந்த நத்தார் விழா
வடமராட்சி செவிப்புலனற்றோர் நிறுவனம் நடாத்தும் வருடாந்த நத்தார் விழா நேற்று (17) காலை 9:30 மணியளவில் மாலிசந்தி பகுதியில் உள்ள வடமராட்சி செவிப்புலனற்றோர் சங்க மண்டபத்தில் அதன் செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.
இதில் பிரதம விருந்தினராக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி பிரிவின் தலைவர் திரு ரகுபரன், சிறப்பு விருந்தினராக இலங்கை செஞ்சிலுவைச் சங்க செயலாளர் பகீரதன் ஆகியோர் கலந்து கொண்டு வடமராட்சி செவிப்புலனற்றோர் குடும்பங்களின் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைத்தனர்.
இந்நிகழ்வில் கரவெட்டி செவிப்புலனற்றோர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)