
posted 29th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சுழல் காற்றால் வீடுகள் சேதம்
தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் வீசிய சுழல் காற்று காரணமாக தம்பலகமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு கிராமசேவகர் பிரிவின் பத்தினிபுரம், இக்பால் நகர் முதலான பகுதிகளில் சுமார் ஐந்துக்கு மேற்பட்ட வீடுகளுக்கும், கடை ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சிலருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் வீடுகளின் கூரைகள் மற்றும் பலன் தரும் மரங்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளதுடன், குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்துள்ளதால் அடுத்த மழை பெய்தால் எங்கே செல்வது எனவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் தங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருமாறும் பதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)