சாய்ந்தமருதில் மு.கா. கிளைகள் புனரமைப்பு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சாய்ந்தமருதில் மு.கா. கிளைகள் புனரமைப்பு

சாய்ந்தமருது பிரதேசத்தில் கல்முனை 23ஆம் வட்டாரத்திற்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிளைகளை புனரமைப்பு செய்வதற்கான விசேட கூட்டம் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் அதிஉயர் பீட உறுப்பினருமான கலாநிதி சிராஸ் மீராசாகிப் தலைமையில் அவரது சாய்ந்தமருது இல்ல வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளரும் முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல். அப்துல் மஜீட், பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதர், பிரதி தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, மாவட்ட குழுவின் செயலாளர் ஏ.சி. சமால்தீன், சாய்ந்தமருது அமைப்பாளர் எம்.ஐ.எம். பிர்தௌஸ், மாளிகைக்காடு அமைப்பாளர். எம்.எம். இஸ்மாயில் உட்பட கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், கட்சிப் பிரமுகர்கள் மற்றும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கட்சி யாப்பின் பிரகாரம் 23ஆம் வட்டாரத்திலுள்ள 14,16,17 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கான நிர்வாக சபைகள் தெரிவு செய்யப்பட்டன.

கட்சியின் வளர்ச்சியில் கிளை நிர்வாகிகளின் வகிபாகம் இன்றியமையாதது என்றும், தனிப்பட்ட நலன்களுக்கு அப்பால் அனைவரும் சமூக நலன் கருதி அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் என்றும் தவிசாளர் அப்துல் மஜீத் வலியுறுத்தினார்.

சாய்ந்தமருதில் மு.கா. கிளைகள் புனரமைப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)