
posted 22nd December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கல்முனை வலய பாடசாலைகளை பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தரிசிப்பு
கல்முனை கல்வி வலய செயலாளரின் கோரிக்கையை ஏற்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கல்முனை வலய பாடசாலைகளுக்கான தரிசிப்பை மேற்கொண்டு அதிபர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை, கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மற்றும் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு சமூகமளித்திருந்தார். இதன் போது அதிபர் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிபர் ஆசிரியர்களால் தோழர் ஜோசப் ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்டு உரிய தரப்பினருடன் பேசி தீர்வை பெற்றுக் கொடுக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
இதன்போது போதுமான ஒத்துழைப்புகளை வழங்கிய கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர், கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் மற்றும் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய அதிபர் ஆகியோருக்கும் அப்பாடசாலையின் ஆசிரியர்கள் ஆகியோருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கல்முனை கிளை சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதன் போது பட்டிருப்பு வலய செயலாளர் மற்றும் மட்டக்களப்பு வலய இடமாற்ற சபை உறுப்பினர் ஆகியோர் சமூகமளித்திருந்தனர். அத்துடன் அடுத்த வருடம் மேலும் சில கல்முனை வலய பாடசாலைகளுக்கான தரிசிப்புகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கல்முனை கிளை செயலாளர் தெரிவித்தார்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)